கடவுளுக்கும் மனிதகுலத்திற்கும் தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தவர் போப் பிரான்சிஸ் என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார்.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (வயது88), வாட்டிகனில் உள்ள தனது இல்லத்தில் வயது மூப்பு காரணமாக காலமானார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
போப் பிரான்சிஸ் காலமானார் என்ற செய்தி அறிந்து வருத்தமடைந்தேன் என்றும் கடவுளுக்கும் மனிதகுலத்திற்கும் தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தவர் போப் பிரான்சிஸ் என்று அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார்.
அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நிலைநிறுத்துவதற்காக அவர் ஆற்றிய தன்னலமற்ற பங்களிப்புகளுக்காக கத்தோலிக்க சமூகம் போப்பை நினைவில் கொள்ளும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.