4 நாட்கள் பயணமாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இந்தியா வந்தார்.
இத்தாலி பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தனி விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தார்.
ஜே.டி.வான்சின் மனைவி உஷா வான்ஸ் மற்றும் அவரது மகனகளும் உடன் வந்திருந்தனர். விமானத்திலிருந்து இறங்கிய அவரை மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வரவேற்றார்.
இதையடுத்து மத்திய அரசு சார்பில் அவருக்குச் சிவப்பு கம்பள வரவேற்பு மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
இதையடுத்து, சுவாமி நாராயணன் அக்ஷர்தாம் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்யும் ஜே.டி.வான்ஸ், பின்னர் கைவினை பொருட்கள் விற்பனை செய்யும் வணிக வளாகத்தைப் பார்வையிடுகிறார்.
மாலை 6.30 மணிக்குப் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதனை அடுத்து, ஜே.டி.வான்ஸ் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகளுக்குப் பிரதமர் மோடி இரவு விருந்து அளிக்கிறார்.