தேசத்தின் வளர்ச்சிக்காக நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என அரசு அதிகாரிகளிடம் பிரதமர் மோடி தெரிவித்தார்.
17-வது தேசிய குடிமை பணிகள் தினத்தை ஒட்டி டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் அரசு அதிகாரிகளின் முன்னிலையில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, குடிமக்களின் தேவைகளுக்கும், விருப்பங்களுக்கும் ஏற்ப நம் பணிகளை மாற்றி அமைக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் நாடு தற்போது தொலைநோக்குப் பார்வையை உருவாக்கத் தொடங்கியுள்ளது எனக் கூறினார்.
மக்கள் தொகைக்கு ஏற்ப அடிப்படை வசதிகளை அடைவதில் நாம் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் தேசத்தின் வளர்ச்சிக்காக நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.