கனடாவில் உள்ள லட்சுமி நாராயணன் கோவிலைக் காலிஸ்தான் பயங்கரவாதிகள் சேதப்படுத்தியுள்ளனர்.
கோவில் சுவர்களைச் சேதப்படுத்தியதுடன், காலிஸ்தான் ஆதரவு வாசகங்களையும் எழுதி வைத்துள்ளனர். இதுகுறித்து பேசியுள்ள கனடா எம்.பி சந்திர ஆர்யா, பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய ஹிந்து கோவில்கள் மீதான தாக்குதல் இன்றும் தொடர்ந்து வருவது கண்டிக்கத்தக்கது எனக் கூறியுள்ளார்.