அமெரிக்காவில் விமான விபத்தில் 4 பேர் பலியாகினர்.
மெனோமொனி நகரிலிருந்து இல்லியான்ஸ் மாகாணத்திற்கு சிசா 180 என்ற சிறியரக விமானம் புறப்பட்டது.
அந்த விமானத்தில் 2 பெண்கள் உள்பட 4 பேர் பயணித்தனர். இல்லியான்ஸ் மாகாணத்தின் டிரில்லா நகரில் விமானம் தரையிறங்கத் தாழ்வாகப் பறந்தது.
அப்போது, எதிர்பாராத விதமாகச் சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த மின் கம்பி மீது விமானம் உரசியது. இதனால், விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் சாலையோர வால்பகுதியில் மோதி வெடித்துச் சிதறியது.