இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை 2-வது கட்டமாக பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
இந்த ஏவுகணைகள் நிலம், போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களில் இருந்து ஏவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிரம்மோஸ் ஏவுகணைகள் ஒலியைவிட 3 மடங்கு அதிக வேகத்தில் சீறிப்பாய்ந்து 290 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் படைத்தது.
தென்சீனக் கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்தும் நிலையில், இந்தியாவிடம் இருந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை பிலிப்பைன்ஸ் வாங்கி வருகிறது.