10ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் ஒரு மதிப்பெண் வினாவில் 4வது கேள்வியை அட்டெண்ட் செய்திருந்தாலே மதிப்பெண் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கி, இம்மாதம் 15-ம் தேதியுடன் நிறைவடைந்தது. சமூக அறிவியல் தேர்வில் ஒரு மதிப்பெண் வினாக்கள் பிரிவில் கேட்கப்பட்டிருந்த 4-வது கேள்வி மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.
கேள்வியிலிருந்த வாக்கியங்கள் முரணாக இருந்ததால், மதிப்பெண் வழங்க ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், சம்மந்தப்பட்ட கேள்வியை அட்டெண்ட் செய்திருந்தாலே ஒரு மதிப்பெண் வழங்குமாறு அரசு தேர்வுகள் துறை அறிவுறுத்தியுள்ளது.