நாட்டை அவமதிக்கும் ராகுல் காந்தியைக் காங்கிரஸ் கட்டுப்படுத்த வேண்டும் என மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, இந்தியத் தேர்தல் அமைப்பில் தவறு உள்ளதாகக் கூறினார்.
இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள மோகன் யாதவ், ராகுல் காந்தி வெளிநாட்டு மண்ணில் இந்திய நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகக் கூறினார்.
மேலும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் அவர்களுடைய தலைவரைக் கட்டுப்படுத்துவது அவசியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.