திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்திற்கு மனு கொடுக்க வந்த பொதுமக்கள், ஆடு மாடுகளைப் போல் அடைத்து வைக்கப்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று குறைதீர் கூட்டம் நடைபெற்றது. தங்கள் பிரச்சனைகள் தொடர்பாக ஆட்சியரைச் சந்தித்து மனு கொடுக்க வந்த பொதுமக்கள், இரண்டரை மணி நேரம், ஆடு மாடுகளை அடைத்து வைப்பது போல் அடைத்து வைக்கப்பட்டனர்.
நலத்திட்ட உதவிகள் வழங்குவதாகக்கூறி அலைக்கழித்த மாவட்ட ஆட்சியர் சரவணனின் செயலால் கொந்தளித்துப் போன மக்கள், தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, மாவட்ட ஆட்சியருக்கு எதிராகக் கண்டன முழக்கம் எழுப்பி, எதிர்ப்பை வெளிப்படுத்தினர். குறைதீர் கூட்டத்திற்கு 10 மணிக்கு வர வேண்டிய ஆட்சியர், ஒவ்வொரு முறையும் தாமதமாகவே வருவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டினார்.