அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டுமென, மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் வலியுறுத்தி உள்ளார்.
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்த கௌரவ விரிவுரையாளர்கள் ஏழாயிரத்து 500 பேர், தமிழகம் முழுவதும் தற்காலிக ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர்.
ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பலமுறை போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், சென்னை மெரினா கண்ணகி சிலை அருகே நேற்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டபோது போலீசார் வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர்.
பின்னர் அவர்களைத் திருவல்லிக்கேணியில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் போலீசார் தங்க வைத்து, மாலையில் விடுவித்தனர்.