தேசிய உணர்வே உண்மையான வளர்ச்சி : ஸ்ரீதர் வேம்பு பளிச் பதிவு!
Jul 23, 2025, 06:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

தேசிய உணர்வே உண்மையான வளர்ச்சி : ஸ்ரீதர் வேம்பு பளிச் பதிவு!

Web Desk by Web Desk
Apr 22, 2025, 09:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனாவை எதிர்த்துப் போட்டியிட விரும்பினால், அந்நாட்டின் 100 ஆண்டுக் கால வரலாற்றில் இருந்து இந்தியா  படிப்பினையை கற்றுக் கொள்ள வேண்டும் என்றும், இந்தியாவில் தேசிய மனநிலையில் மறுமலர்ச்சிக்கான மாற்றம் ஏற்பட வேண்டும் என்று ஜோஹோ ஸ்ரீதர் வேம்பு வலியுறுத்தியுள்ளார்.  அது பற்றி இந்த செய்தி தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.

முன்னணி தொழில் நுட்ப நிறுவனமான ஜோஹோவின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகிய ஸ்ரீதர் வேம்பு, அந்நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுத் துறையில் முழுமையான கவனம் செலுத்தி வருகிறார்.

சமூக ஊடகங்களில் தீவிரமாகச் செயல்பட்டு வரும் ஸ்ரீதர் வேம்பு, தனது எக்ஸ் பதிவில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிக கவனம் செலுத்துவதை விட  இந்தியாவின் மறுமலர்ச்சிக்கான மாற்றத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பொருளாதாரத்தை வளர்ப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாமல், நாட்டின்  சிறந்த நாகரிகத்தை மீட்டெடுப்பது என்று தேசிய திட்டத்தை முன் வைத்தே சீனா  செயலாற்றி வருகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை, பொருளாதார வளர்ச்சி குறித்த விவாதங்கள் நாட்டின் தேசிய கலாச்சாரத்தின் தேவையை மறக்க வைத்து விடுகின்றன. பாரம்பரியம் மிக்க பண்டைய பண்பாட்டின் வாரிசுகளாக மக்கள் தங்களை உணரும் போது தான் உண்மையான தேசிய மறுமலர்ச்சி ஏற்படுகிறது.

இந்தியா தனது சொந்த உற்பத்தித் துறைகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள ஸ்ரீதர் வேம்பு, பொருளாதார வளர்ச்சிக்கான சீனாவின் படிப் படியான அணுகுமுறைகளில் இருந்து கற்றுக் கொள்ளவேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த 100 ஆண்டுக்கால சீன வரலாற்றில், மாவோ சேதுங்கின் புரட்சி, கலாச்சாரப் புரட்சி, நாட்டை கலைத்துப் போட்டன. மேலும் நாட்டின் பசி பட்டினியால் மட்டுமின்றி, உள்நாட்டு அரசியல் மாற்றத்தால் பல மில்லியன் கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இத்தனை துயரமும், வேதனையும்,தேசத்துக்கான தியாகத்துக்கு வழி வகுத்தது என்றும், இத்தனைக்கும் இடையே சீனா தன்னை மீண்டும் கட்டியெழுப்பியது.

உத்வேகம் தரும் சீனாவின் வரலாற்றைக் கற்றுணர வேண்டும் என்றும், அதனை இந்தியாவின் தேவைக்கேற்ப மாற்றுவதன் முக்கியத்துவத்தையும் ஸ்ரீதர் வேம்பு விளக்கியுள்ளார்.   சிந்தனையில் ஏற்படும் மாற்றம் சகிப்புத்தன்மை உருவாக்க முடியும் என்று நம்புவதாகக் கூறியுள்ள அவர்,  எவ்வளவு கடினமாக இருந்தாலும், நீண்டகால மாற்றத்துக்குத் தேவையான மன உறுதியையும் சகிப்புத்தன்மையையும் நாடு மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும், இந்தியாவின்  ஐடி துறையின் எதிர்காலம் குறித்தும் ஸ்ரீதர் வேம்பு எச்சரிக்கை விடுத்துள்ளார்.  தொழில்நுட்பத்தில் இந்தியாவின் பங்கை மறுபரிசீலனை செய்ய அழைப்பு விடுத்திருக்கும்  ஸ்ரீதர் வேம்பு,  உலக ஜாம்பவான்களின் back office ஆக இருப்பதை நிறுத்திவிட்டு, உள்நாட்டிலேயே கணினி தொழில் நுட்பத்தை மேம்படுத்த  வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

பொதுவாக, இந்தியா போன்ற நாடுகள், மென்பொருள் ஏற்றுமதியைச் சுற்றியே  தங்கள் பொருளாதாரங்களைக் கட்டமைத்துள்ளன. குறிப்பாக, திறமையின்மையை இயல்பாக்குவதையே இந்திய ஐடி துறை வளர்த்துள்ளது.

இரண்டு பேர் கொண்ட குழு, 20 பேர் கொண்ட குழுவை விடச் சிறப்பாகச் செயல்பட முடியும் என்ற நிலையிலும், நிலையான டாலர் வருமானம் என்பதால்  இந்திய நிறுவனங்கள் மொத்தமாக நிறைய ஊழியர்களைப் பணியமர்த்திக் கொண்டே இருந்தன. செயற்கை நுண்ணறிவின் வருகையால், மென்பொருள் தொழில்நுட்பத் துறையில்  தலைகீழ் மாற்றங்கள் ஏற்படலாம் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

இந்நிலையில்,அடுத்த 30 ஆண்டுகள் கடந்த காலத்தைப் போல இருக்காது என்று குறிப்பிட்டுள்ள ஸ்ரீதர் வேம்பு, தொழில்துறைத் தலைவர்கள் தங்கள் அனுமானங்களை மறு ஆய்வு செய்து, சவால்களைச் சமாளிக்கும் உத்திகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தொழில்துறையில் மட்டுமல்ல, அடையாளத்திலும் ஒரு ஆழமான திருப்புமுனையின் விளிம்பில் நாடு இருப்பதாகக் கூறியுள்ள ஸ்ரீதர் வேம்பு, கடினமாக உழைப்பதற்கு மட்டுமல்ல நீண்ட தொலைநோக்குப் பார்வையுள்ள கனவை நிஜமாக்க,தேசிய  மனநிலையில், பாரத பாரம்பரியம் சார்ந்த சிந்தனை மாற்றம் வரவேண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

Tags: சீனாஸ்ரீதர் வேம்புNational consciousness is real development: Sridhar Vembu Bali's post
ShareTweetSendShare
Previous Post

மிளிரும் டிஜிட்டல் இந்தியா : TOLL GATE-ல் நிற்க வேண்டாம் – GPS மூலம் சுங்க கட்டணம்!

Next Post

ஜம்மு-காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் – பிரதமர் மோடி கண்டனம்!

Related News

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

அஜித்குமார் கொலை வழக்கு : மடப்புரம் கோயில் பணியாளர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை!

திருப்பதியில் போதை ஊசி செலுத்திக் கொண்டிருந்த இளைஞர்கள் பிடிபட்டனர்!

மகளிர் உரிமைத் தொகை வரவில்லை – அதிகாரிகளுடன் பெண்மணி வாக்குவாதம்!

திருப்பதி திருமலையில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புதிய ஆய்வகம்!

கேரளா : பேருந்து மோதி பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

வியாழக்கிழமை காலை 11 மணி வரை அவைகள் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies