திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் மீண்டும் கரடி உலா வரும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
நெசவாளர் காலணியில் உள்ள சாஸ்தா கோயில் அருகே சுற்றித்திரிந்த கரடி கடந்த மார்ச் 30ம் தேதி வனத்துறையின் கூண்டில் சிக்கியது.
இதையடுத்து அந்த கரடி வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் அதே பகுதியில் ஒற்றை கரடி உலா வந்தது.
இதன் சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், மீண்டும் அதே கரடிதான் சுற்றித்திரிகிறதா எனப் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.