கோஸ்டாரிகாவில் உள்ள போவாஸ் எரிமலை பயங்கரமாக வெடித்துச் சிதறியது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த எரிமலை வெடித்தது.
ஆனால் தற்போதும் திடீரென வெடித்துச் சிதறியது. இதனை தொடர்ந்து விண்ணை முட்டும் அளவிற்குச் சாம்பல் மற்றும் கரும்புகையை தொடர்ந்து வெளியேற்றி வருகிறது.
இதனால் எரிமலையைச் சுற்றி வசிக்கும் மக்கள், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர். மேலும், நில அதிர்வும் லேசாக உணரப்பட்டதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.