தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 2 ஆயிரத்து 200 ரூபாய் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வரும் தங்கம் விலை இன்று வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 2 ஆயிரத்து 200 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் 74 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராமுக்கு 275 ரூபாய் அதிகரித்து 9 ஆயிரத்து 290 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையில் மாற்றம் இல்லாததால் ஒரு கிராம் 111 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஒரு லட்சத்து பதினொரு ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.