ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஹால்கம் மாவட்டத்திற்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் 8 பேர், பைசாரன் பகுதியில் சுற்றுலாத் தலங்களைக் கண்டு ரசித்தனர்.
அப்போது ராணுவ வீரர்கள் போல் சீருடை அணிந்து அங்கு வந்த பயங்கரவாதிகள், சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்த நிலையில், காயமடைந்த 7 சுற்றுலாப் பயணிகளைப் பாதுகாப்புப் படையினர் மீட்டனர்.
தொடர்ந்து அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் நிலையில், இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பைசாரன் வேலி பகுதிக்கு விரைந்து பாதுகாப்புப் படையினர், அங்குத் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.