ஜம்மு-காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 28 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக கூறியுள்ளார்.
கொடூரமான செயலுக்குப் பின்னால் உள்ளவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் அவர்கள் தப்ப முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தீய திட்டம் ஒருபோதும் வெற்றி பெறாது எனக் கூறியுள்ள பிரதமர் மோடி, பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான தங்களின் உறுதி அசைக்க முடியாதது எனவும் குறிப்பிட்டுள்ளார்.