கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே அதிக விளைச்சல் காரணமாக கேரட்டின் கொள்முதல் விலை குறைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
வழக்கமாக ஒரு கிலோ கேரட் 30 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் நிலையில் அதிக விளைச்சல் காரணமாக கிலோ 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. எனவே தமிழக அரசு கேரட் கொள்முதல் விலையை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.