பஹல்காம் தாக்குதலுக்கு பிந்தைய நிலைமை குறித்து அமைச்சர் அமித்ஷாவிடம் கேட்டறிந்ததாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் தாரிக் கர்ரா ஆகியோரிடமும் பேசியதாக கூறியுள்ளார்.
மேலும், பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், அதற்கு காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.