ஜம்மு – காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சுற்றுலாப் பயணிகளின் உடல்களுக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா நேரில் அஞ்சலி செலுத்தினார்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் அஞ்சலிக்காக ஸ்ரீ நகரில் உள்ள மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உயிரிழந்தோரின் உடல்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், சில நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்திய அவர், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.