பயங்கரவாத தாக்குதலில், திருமணமான 7 நாட்களில் கடற்படை அதிகாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 26 வயதான விநய் நார்வால், கொச்சியில் இந்திய கடற்படையில் லெப்டினன்ட் அதிகாரியாக பணியாற்றி வந்தார். விடுமுறைக்கு சொந்த ஊர் திரும்பிய அவருக்கு கடந்த 16ம் தேதி திருமணம் நடைபெற்றது.
தொடர்ந்து விநய் நார்வால் தனது மனைவியுடன் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்தார்.
அப்போது தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் மனைவி கண் முன்பே அவர் கொல்லப்பட்டார். திருமணமாகி 7 நாட்களில் கடற்படை அதிகாரி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை மட்டுமின்றி நாட்டு மக்கள் மனதையும் உலுக்கியுள்ளது..