காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக 2 தீவிரவாதிகளை ராணுவத்தினர் என்கவுண்ட்டர் செய்தனர்.
பஹல்காம் தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பவ இடத்தில் ராணுவம், மத்திய ஆயுதப்படை மற்றும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
மலைப்பாங்கான பகுதிகளில் குழுக்களாகவும், ஆட்கள் செல்லமுடியாத இடங்களில் ஹெலிகாப்டர்கள் மூலமாகவும் அவர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.