கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 5 காட்டு யானைகள் மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டன.
கோடைகாலம் என்பதால் நீர் மற்றும் உணவு தேடி யானை கூட்டங்கள் வனப்பகுதியை விட்டு வெளியேறி வரும் நிலையில், அதிகாலையில் ஆலியாளம் பகுதியில் முகாமிட்டிருந்த 5 யானைகள் விளைநிலங்களை சேதப்படுத்தியுள்ளன.
இது குறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர், யானைகள் கிராமப் பகுதிக்குள் புகுந்து விடாதவாறு அவற்றை சாணமாவு வனப்பகுதிக்குள் விரட்டினர்.