ராயல் என்ஃபீல்டு நிறுவனமானது இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் ஹண்டர் 350 பைக்கை அப்டேட் செய்யவிருக்கிறது.
அதன்படி, ராயல் என்ஃபீல்டின் மற்ற 350 சிசி பைக்குகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே 349 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜினே ஹண்டர் 350 பைக்கிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்த இன்ஜினானது 20 hp பவர் மற்றும் 27 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கிறது.
புதிய ஹண்டர் 350 பைக்கில் மெக்கானிக்கலாக எந்த மாற்றமும் இருக்காது. இது ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வரையில் விற்பனையாகும் என கூறப்படுகிறது.