பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீதான பயங்கரவாதிகள் தாக்குதலைக் கண்டித்து ஜம்முவில் இந்து அமைப்பினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 28 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் இந்துகளை மட்டும் பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகள் மீதான தாக்குதலைக் கண்டித்து ஜம்முவில் இந்து அமைப்பினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் பாஜக மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அதேபோல், பஹல்காமில் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கோஷங்களை எழுப்பிய அவர்கள், கையில் தேசிய கொடியை ஏந்திய படி ஊர்வலமாக சென்றனர்.