பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை ஜேசன் கில்லெஸ்பி விமர்சித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஜேசன் கில்லெஸ்பி கடந்த ஆண்டு ஏப்ரலில் நியமிக்கப்பட்டார்.
2026 வரை பயிற்சியாளராக அவர் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஒரு வருடத்திற்குள்ளேயே பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில், சுமார் ஆறு மாதங்களாகியும் தமது வேலைக்கான சம்பள பாக்கியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வழங்கவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால், 4 மாத அறிவிப்பு கால அவகாசம் வழங்காமல் திடீரென பதவியை ராஜினாமா செய்ததாகப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.