போலந்தில் கட்டுக்கடங்காமல் பற்றி எரிந்து வரும் காட்டுத்தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பீப்ர்சா தேசிய பூங்கா பகுதியில் உள்ள வனப்பகுதியில் கடந்த சில தினங்களாக வெப்பம் வாட்டி வதைத்து வந்தது.
இதன் காரணமாக அங்குக் காட்டுத்தீ ஏற்பட்டது. காற்றின் வேகமும் அதிகரித்துள்ளதால் மளமளவென தீ பரவி வருகிறது.
இதனால் விண்ணை முட்டும் அளவிற்கு கரும்புகையாக காட்சியளிக்கிறது. தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஹெலிகாப்டர் உதவியுடன் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.