சீனாவில் சிறுமி ஒருவர் நிஞ்ஜா சவாலை 3 நிமிடங்களில் செய்து முடித்து அசத்தியுள்ளார்.
நிஞ்ஜா விளையாட்டு என்பது நிஞ்ஜாவின் திறமைகளைச் சோதிக்கும் ஒரு சாகச விளையாட்டு ஆகும்.
இதில், நிஞ்ஜா ஒரு கொடிய பாதையில் பயணித்து, தடைகளைக் கடந்து செல்ல வேண்டும். அந்தவகையிலான சாகசத்தை சீனாவை சேர்ந்த மிமி என்ற ஏழு வயது சிறுமி செய்து அசத்தியுள்ளார்.
இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.