காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் பகுதியில் 28 சுற்றுலாப்பயணிகள் கொலை செய்யப்பட்ட நிலையில் அப்பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.
பஹல்காமில் தங்கியுள்ள சுற்றுலாப்பயணிகள், தீவிரவாத தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாகச் சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருகின்றனர்.
மேலும், சுற்றுலா வழிகாட்டிகள், வியாபாரிகள் உள்ளிட்டோரும் அப்பகுதியில் இருந்து வெளியேறினர்.
பஹல்காம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளதால், சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. தனியார் பேருந்துகள், வாடகை வாகனங்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.