ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்த தமிழர்களின் நிலை மற்றும் அவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கராவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 2 தமிழர்கள் உட்பட ஏராளமானோர் காயமடைந்தனர்.
இதில் 17 சுற்றுலா பயணிகள் காயங்களோடு பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 2 தமிழர்களுடைய மருத்துவ நிலை குறித்தான தகவல் வெளியாகியுள்ளது.
அதில் தமிழகத்தை சேர்ந்த 31 வயதான பரமேஸ்வர் என்பவர் வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டு பஹல்காம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும்,
மற்றொரு தமிழரான சாண்டானோ என்பவர் தாக்குதல் சம்பவத்தால் மன அழுத்தம் ஏற்பட்டு சுயநினைவை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 83 இவர், ஜம்மு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், இந்த 2 தமிழர்கள் உள்ளிட்ட 6 பேர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்கணிப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.