அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே பிறந்த பச்சிளம் குழந்தையைப் பெற்றோர் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழுமூர் பகுதியில் கொளுத்தப்பட்ட குப்பையில் பச்சிளம் ஆண் குழந்தையின் சடலம் எரிந்த நிலையில் கிடந்துள்ளது.
இது குறித்துத் தகவலறிந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
அதில், மதிவண்ணன்-திவ்யா தம்பதிக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ள நிலையில், 3வதாக பிறந்த ஆண் குழந்தை தனது சாயலில் இல்லை எனக்கூறி மதிவண்ணன் சண்டையிட்டுள்ளார்.
அப்போது, குழந்தையைத் தூக்கி கீழே வீசியபோது குழந்தை உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.