நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில், மதுவிற்குக் கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கும் கடை ஊழியரின் வீடியோ
வெளியாகியுள்ளது.
குருசாமி பாளையத்தில் இயங்கி வரும் அரசு மதுபான கடையில் மது வாங்குவதற்காகக் கூலித் தொழிலாளி ஒருவர் சென்றுள்ளார்.
அப்போது மதுபாட்டில் ஒன்றிற்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதலாக பத்து ரூபாயைக் கடை ஊழியர் வசூல் செய்துள்ளார்.
இது தொடர்பாகக் கேள்வி கேட்டபோது கடை ஊழியர் அடாவடியாகப் பதிலளிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.