தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே தனியார் பேருந்தும், சிமெண்ட் ஏற்றி வந்த மினி வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
தேனி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தும், சிமெண்ட் ஏற்றி வந்த மினி வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வேன் ஓட்டுநர் முத்துலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்தில், காயமடைந்த தனியார் பேருந்து பயணிகள் 20க்கும் மேற்பட்டோர் தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.