இந்தியா, சவுதி அரேபியா இடையே ஒத்துழைப்பை மேம்படுத்த பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா மற்றும் சவுதி அரேபியா இடையே விண்வெளி, சுகாதாரம், ஊக்கமருந்து எதிர்ப்பு மற்றும் அஞ்சல் கவுன்சில் ஆகியவற்றில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜெட்டாவில் நடைபெற்ற இரு நாடுகளின் கூட்டாண்மை கவுன்சிலின் 2வது கூட்டத்திற்குப் பிரதமர் மோடியும், சவுதி இளவரசர் முகமதும் தலைமை தாங்கியதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.