செர்பியாவில் வெளுத்து வாங்கிய கனமழையால் சாலைகளில் ஆறு போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
கடந்த சில நாட்களாக செர்பியாவில் கனமழை பெய்து வரும் நிலையில், நீர்நிலைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளத்தால் சூழப்பட்டு பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும், சாலைகளில் ஆறு போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்குக் கூட மக்கள் வாகனங்களை இயக்க முடியாமல் கடும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.