சுவிட்சர்லாந்தில் வரலாறு காணாத பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இயற்கை எழில் கொஞ்சும் சுவிட்சர்லாந்தைக் காண்பதற்காக ஏராளமானோர் விரும்பி பயணங்களை மேற்கொள்வது வழக்கம்.
ஆனால், வாலைஸ், டிசினோ மற்றும் பெர்னீஸ் ஓபர்லேண்ட் உள்ளிட்ட மாகாணங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் விஸ்ப் மற்றும் ஜெர்மாட்டிற்கு இடையிலான ரயில் சேவை, பேருந்து, விமான போக்குவரத்து ஆகியவையும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால் அத்தியாவசிய பொருட்களைக் கூட வாங்க முடியாமல் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.