சீனாவில் பலத்த காற்றால் பூத்துக் குலுங்கும் செர்ரி மலர்கள் உதிரும் கண்ணைக் கவரும் காட்சி வெளியாகியுள்ளது.
ஜப்பானைத் தொடர்ந்து சீனாவிலும், சகுரா என அழைக்கப்படும், செர்ரி பிளாசம் மரத்தில், மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.
அவை வசந்த காலத்தை வரவேற்று உதிரும். தற்போது கண்ணைக் கவரும் வகையில் பூத்துக் குலுங்கும் செர்ரி பூக்களைக் காண மக்கள் கூட்டம் கூட்டமாகக் குவிந்தனர்.
இந்த நிலையில், ஹுனான் மாகாணத்தில் உள்ள ஷெஜியாங் பகுதியில் பலத்த காற்று காரணமாக செர்ரி மலர்கள் மரத்திலிருந்து உதிர்ந்து பறந்தன. இந்த அழகான காட்சி அனைவரையும் கவர்ந்தது.