மறைந்த கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸின் இறுதிச்சடங்கு சனிக்கிழமை நடைபெறும் என வாடிகன் நிர்வாகம் அறிவித்துள்ளது.
வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ், கடந்த திங்கட்கிழமை காலமானார்.
அவரது இறுதிச்சடங்கு சனிக்கிழமை நடைபெறும் என வாடிகன் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி சனிக்கிழமை, போப் பிரான்சிஸின் இறுதி ஊர்வலம் புனித பீட்டர்ஸ் பேராலயத்தில் இருந்து, சாண்டா மார்த்தா சதுக்கம் மற்றும் ரோமானிய தியாகிகளின் சதுக்கம் வழியாக நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.
பின்னர் ஊர்வலம் மணி வளைவு வழியாக செயிண்ட் பீட்டர் சதுக்கத்திற்குள் சென்று வாடிகன் பேராலயத்தின் மைய வாசல் வழியாக நுழைந்து, வாக்குமூல பலி பீடத்திற்கு செல்லும் என கூறப்பட்டுள்ளது.
அங்கு இறுதிச்சடங்கு நடைபெற்ற பின்னர், ரோமில் உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்காவில் போப் பிரான்சிஸ் உடல் அடக்கம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.