ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடந்த இடத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தார்.
ஜம்மு-காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்குப் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கரே தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் பொறுப்பேற்றுள்ளது.
இந்த கொடூர தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தாக்குதலில் பலியானவர்கள் உடலுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அஞ்சலி செலுத்தினார்.
இதனையடுத்து தாக்குதல் நடந்த இடத்திற்கு ராணுவ ஹெலிகாப்டரில் சென்று, அமித்ஷா ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அதிகாரிகளிடம் தாக்குதல் சம்பவம் குறித்து ஆலோசனை நடத்தினார்.