தேனி மாவட்டம் குமுளி மலைச் சாலையில் பிரேக் செயலிழந்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து, தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
குமுளியிலிருந்து திண்டுக்கல் நோக்கி 20 பயணிகளுடன் அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது.
மலைச் சாலையில் மாதா கோயில் அருகே பயணித்தபோது பேருந்தின் பிரேக் செயலிழந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் நல்வாய்ப்பாகப் பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.