வங்கி மோசடியில் பெல்ஜியம் நாட்டில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான மெஹுல் சோக்சிக்கு, அந்நாட்டு நீதிமன்றம் பிணை வழங்க மறுத்தது.
மும்பையைச் சேர்ந்த மெஹுல் சோக்சி, அவரது உறவினர் நிரவ் மோடி இணைந்து வைர வியாபாரம் செய்து வந்தனர்.
அவர்கள், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில், 13 ஆயிரம் கோடி கடன் பெற்று அதைத் திருப்பி செலுத்தாமல், 2018ல் வெளிநாடு தப்பிச் சென்றனர்.
நிரவ் மோடி, பிரிட்டன் தலைநகர் லண்டனில் 2019ல் கைது செய்யப்பட்டார். மற்றொரு குற்றவாளியான மெஹூல் சோக்சி, பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டார். அவருக்கு பிணை வழங்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.