காஷ்மீருக்குச் சுற்றுலா சென்று டெல்லி திரும்பிய 35 தமிழர்கள், அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் செவ்வாய்க்கிழமையன்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் காஷ்மீருக்குச் சுற்றுலா சென்று சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்த 35 தமிழர்கள் ஜம்முவில் இருந்து பாதுகாப்பாக டெல்லி திரும்பியுள்ளனர்.
அவர்கள் அரசு சார்பில் டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் மீண்டும் தமிழகம் திரும்பவும் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.