பீகாரில் ரூ.13,480 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.
நாளை பிரதமர் நரேந்திர மோடி பீகாருக்கு பயணம் மேற்கொள்கிறார். காலை 11:45 மணியளவில் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சியில் ரூ.13,480 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து அவர் உரையாற்றுகிறார்.
பீகார் மாநிலம் மதுபானியில் நடைபெறும் தேசிய பஞ்சாயத்து ராஜ் தின நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக செயல்பட்ட உள்ளாட்சி அமைப்புகளை அங்கீகரிக்கும் வகையில் ஊக்கத்தொகை மற்றும் தேசிய பஞ்சாயத்து விருதுகளை பிரதமர் நரேந்திர மோடி வழங்குகிறார்.
பீகாரில் அம்ரித் பாரத், நமோ பாரத் விரைவு ரயில் சேவைகளை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.