கிராமப்புறத்தில் இருந்து அதிக பெண்கள் போட்டி தேர்வுகள் எழுதி வெற்றி அடைய வேண்டும் என அகில இந்திய அளவில் UPSC தேர்வில் 125 வது இடம் பிடித்த சரண்யா தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் பத்திரக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவரது மகள் சரண்யா UPSC தேர்வில் வெற்றி பெற்று அகில இந்திய அளவில் 125 ஆவது இடம் பெற்றுள்ளார். இதை அடுத்து தனது சொந்த கிராமத்திற்கு வந்த சரண்யாவிற்கு கிராம மக்கள் பட்டாசு வெடித்து மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து கோவில்களில் அவருக்காக சிறப்பு அர்ச்சனைகளும் செய்தனர். இதையடுத்து நமது ஜனம் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த சரண்யா மூன்றாண்டுகள் கடுமையாக சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகி மூன்றாவது முறையாக வெற்றி அடைந்துள்ளதாக தெரிவித்தார்.