கோவை மாவட்டம் சிறுமுகை கூத்தா மண்டி வனப் பகுதியில் உடல்நலம் குன்றிய காட்டு யானைக்கு 2-வது நாளாக வனத்துறையினர் சிகிச்சை அளித்தனர்.
அதன்படி யானைக்கு கிர்ணி, தர்பூசணி, வாழைப்பழம் உள்ளிட்டவற்றில் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை வைத்து வனத்துறையினர் வழங்கி வருகின்றனர்.
மேலும், யானை வனப் பகுதிக்குள் முன்னேறி செல்லும் நிலையில் வனத்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.