சேலத்தில் ஜேஇஇ முதன்மைத் தேர்வில் சாதனை படைத்த மாணவர்கள் பெற்றோருடன் கேக் வெட்டி கொண்டாடினர்.
குரங்குசாவடி பகுதியில் உள்ள தனியார் பள்ளியை சேர்ந்த 2 மாணவர்கள், 300க்கு 300 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர். மேலும் 130 மாணவ – மாணவிகள் தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.
இதையடுத்து வெற்றி பெற்ற மாணவ – மாணவியருக்கு ஆசிரியர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். தங்களது பெற்றோருடன் கேக் வெட்டி வெற்றியை மாணவர்கள் கொண்டாடினர்.