திருச்சி மாவட்டம், நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் நிலவும் தொடர் மின்வெட்டைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள தாளக்குடி ஊராட்சியில் நள்ளிரவில் 3 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் துண்டிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருச்சி – சிதம்பரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.