நடிகர் நெப்போலியன் மகன் பற்றிய அவதூறு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் இருந்து அகற்றப்பட்டன.
அண்மையில் திருமணம் முடித்த நடிகர் நெப்போலியனின் மகன் தனுஷ் – மருமகள் அக்சயா குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பப்பட்டது.
இதனையடுத்து நெப்போலியன் தரப்பில், அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையில் புகாரளிக்கப்பட்டது.
இந்த நிலையில், அவதூறு பரப்பும் வகையில் யூடியூப்பில் உள்ள வீடியோக்கள் அகற்றப்பட்டுள்ளன.