திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள கரி கிருஷ்ண பெருமாள் கோயில் தெப்ப உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பொன்னேரி அருகே உள்ள கரி கிருஷ்ண பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாள்தோறும் பெருமாளுக்குச் சிறப்புப் பூஜைகள் நடைபெற்ற நிலையில், தெப்ப உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் திருக்குளத்தில் கரி கிருஷ்ண பெருமாள் எழுந்தருளினார்.
பின்னர், திருக்குளத்தை 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.