திண்டுக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பன்னீர் திராட்சைகள் பறிக்காமல் கொடியிலேயே வீணாகி வருவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை அடிவாரப் பகுதிகளான வெள்ளோடு, நரசிங்கபுரம், ஜாதி கவுண்டன்பட்டி, பெருமாள் கோவில் பட்டி, செட்டியபட்டி, அம்மைய நாயக்கனூர், முருகம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் பன்னீர் திராட்சைகள் சாகுபடி செய்யப்படுகின்றன.
தற்போது வெளி மாநிலங்களில் இருந்து பச்சை நிற சீட்லெஸ் திராட்சைகள் வரத்து அதிகரிப்பாலும், தர்பூசணிகள் குறைவான விலைக்கு விற்பனையாவதாலும்
பன்னீர் திராட்சைகளின் விற்பனை குறைந்துள்ளது.
வியாபாரிகள் வாங்க முன் வராததால் சுமார் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பன்னீர் திராட்சைகள் கேட்பாரின்றி தோட்டத்திலேயே வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.