ஈரோடு அருகே உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெருந்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெளிநாட்டவர்கள் உரிய அனுமதியின்றி தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.
அப்போது வங்கதேசத்தைச் சேர்ந்த 7 பேர் உரிய ஆவணங்களின்றி தங்கி வேலை செய்வது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.